கிரிக்கெட் பந்துகளுக்குள் இருக்கும் வித்தியாசமும், குணாதிசியங்களும்!

Updated: Sun, May 30 2021 13:42 IST
Image Source: Google

சின்ன வயசுல 10 ரூபாய்க்கு ஒரு ரப்பர் பந்து வாங்கி, பசங்களோட சேந்து அந்த பந்தை நாலே மேட்ச்ல நாறு நாறாக கிழித்து, வாரத்துக்கு 3, 4 ரப்பர் பந்து வாங்கி விளையாடுவோம். நம்ம ஊரில், வயல் வரப்பில் விளையாட ரப்பர் பந்து போதும். 

ஆனால், அங்கு கூக்கபுரா பந்தை வைத்து விளையாட முடியும்? டியூக் பந்தை வைத்து விளையாட முடியும்? எஸ்ஜி பந்தை வைத்து விளையாட முடியும்? இதெல்லாம், அப்போவே தெரியாம போச்சு. தெரிஞ்சிருந்தா, அந்த பந்தையும் வாங்கி பசங்களோட ஒரு கை பாத்திருப்போம். 

ஆனா என்ன வாரத்துக்கு 3 பந்து வாங்குவதற்கு பதிலாக, 3,4 பேட் தான் வாங்கியிருக்கோனும். அட விஷயத்துக்கு வருவோம்… பல வருஷமா கிரிக்கெட் பார்க்குறோம். ஆனா, கிரிக்கெட்ல என்ன பந்து யூஸ் பண்றாங்க-னு கேட்டா, ‘டி20, ஒன்டே மேட்சுக்கு எல்லாம் வெள்ளை கலர் பந்து, டெஸ்ட் மேட்சுக்கு சிவப்பு பந்து, இப்போ ரோஸ் கலர் பந்து யூஸ் பண்ணுவாங்க’ என்ற வரையில் தான் நமக்கு தெரியும்.

ஆன இந்த பந்துக்களுக்கு கூக்கபுரா, டியூக், எஸ் ஜி-னு பேர் இருக்குனு எத்தனை பேருக்கு தெரியும்?,  ஆனா அதுக்கு பதிலாதான் நாம ஐபிஎல்-னு வந்துடா‘ தோனி டா’ , ‘கோலி டா’ ,‘ரோஹித் டா’ தலையில தூக்கி வச்சு கொண்டாடுறதும், ஒருவேல மேட்ச தோத்துடா மற்ற பிளேயர்ஸ வச்சு செய்யுறதுமா தான இருக்கோம். ஆன அதைத் தாண்டி வேறு எதைப்பற்றியும் யோசிக்கிறதே இல்ல. கிரிக்கெட்டை அப்படி மேலோட்டமாகவே பார்த்துட்டு நாம போயிடக்கூடாது. ஒவ்வொரு விஷயத்தையும் அலசனும்.

அப்படிலாம் அலசி பாக்க இது என்ன துணியானு கேட்க தோணும்.., என்ன பண்றது நம்மாளுங்களுக்கு இப்படி கமெண்ட் பண்றது தான பொழுதுபோக்கே. ஆனா அப்படிலாம் யோசிக்காம என்ன சொல்ல வரனு கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன். 

கிரிக்கெட்...அப்படினா தெருவுக்கு நாலு பேர் சேர்ந்து விளையாடுரதுல தொடங்கி, சச்சின், தோனி, கோலினு சர்வதேச அளவு வரை கிரிக்கெட் அப்படின்ற வார்த்த நம்மளுக்குள்ள ஊறிக்கெடக்கு. அப்படி என்ன தான்யா இந்த பந்துல இருக்குன்னு நீங்க கேக்க வரது புரியுது..., அத பத்தி தான் நாம இப்போ இங்க பாக்க போறோம்.

கிரிக்கெட் ஆரம்பித்த காலத்தில் வெறும் டெஸ்ட் போட்டி மட்டும் தான் விளையாடுனாங்க. போட்டியெல்லாம் பகல்ல தான நடக்கும் அது நால சிவப்பு கலர் பந்து மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க. அப்புறம் ஒருநாள் போட்டிகள் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நைட்ல வும் மேட்ச் நடக்க ஆரம்பிச்சது. 

ஆனா இந்த சிவப்பு கலர் பந்து பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவா தெரியல. சரி என்னடா பண்ணலானும் எல்லாம் மண்டைய பிச்சிட்டு யோசிக்கும் போது தான், இந்தா புடிங்க வெள்ள பந்து... இதுலா விளையாடுங்க பாக்கலானும் யாரோ கொடுத்த ஐடியாவ அப்படியே இம்பிளிமெண்ட் பண்ண, அந்த ஐடியா நல்லபடியா ஒர்கவுட் ஆச்சி..அப்புறம் என்ன எல்லாம் சரியாச்சி போங்கா போய் மேட்ச் பாக்க ஆரம்பிங்கனும் டெஸ்ட் போட்டிக்கு சிவப்பு பந்துனும், ஒருநாள் போட்டினா வெள்ளை பந்துனும் இதுநாள் வரைக்கும் விளையாடிட்டு இருக்கோம்.

ஆன இந்த 2 பந்துலையும் ஏகப்பட்ட டிஃபரென்ஸ் இருக்குங்க. அட என்னடா இவன் இப்படி இழுத்துட்டு போரானு தோணுதா, என்னங்க பண்றது சொல்றத முழுசா சொன்னா தான் உங்களுக்கு புரியும். சரி மேட்டருக்கு வருவோம், சிவப்பு பந்தை விட, வெள்ளை பந்து முதல் இன்னிங்ஸில் கடுமையாக ஸ்விங் ஆகும். சிவப்பு அந்த அளவுக்கு ஸ்விங் இருக்காது. அதே மாதிரி சிவப்பு பந்த விட வெள்ளை பந்து சீக்கிரம் டேமேஜ் ஆகும். 

இத்தனைக்கும், இரண்டையும் ஒரே மாதிரி தான் தயாரிக்குறோம்-னு கம்பெனிக்காரன் கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றான். ஆனாலும், நம்ம வெள்ளை பந்து தான் அதிகம் ஸ்விங் ஆகுது. அதனால், டெஸ்ட் மேட்சுக்கு சிகப்பு பந்து நிரந்தரம் ஆக்கப்பட்டது. இருந்தாலும், இப்போ பகலிரவு டெஸ்ட் போட்டிகள்லாம் நடக்குறதால பிங்க் பால் யூஸ் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க.

அப்புறம் மேல சொல்லிருந்த மாறி இந்த கிரிக்கெட் பந்துகள எல்லாம் கூக்கபுரா, டியூக் அப்புறம் எஸ்.ஜி -னு இந்த மூனு கம்பெனிங்க தான் தயாரிக்கிறாங்க. இப்ப இந்த பந்துகள எந்தெந்த நாடுகளில் யூஸ் பண்றதுன்னு பாப்போம்..!

டியூக் பந்து

கிரிக்கெட்டின் பிறப்பிடம்னு பந்தா பண்ணும் இங்கிலாந்தில் தான் இந்த டியூக் பந்துகள் தாயாரிக்கப்படுது. அதுலையும் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் அத்தனை சர்வதேச, உள்ளூர் போட்டிகளுக்கும் இந்த பந்து தாங்க செட் ஆகும்னு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொல்ல, ஐசிசியும் சரி நீங்க இந்த பந்தையே யூஸ் பண்ணுங்க போங்கனு பர்மிஷன் குடுத்துட்டாங்க. அப்புறம் என்ன இங்கிலாந்தை தொடர்ந்து நம்ப வெஸ்ட் இண்டீஸும் நீங்களே டியூக் யூஸ் பண்றீங்க.., அது நால நாங்களும் டியூக் பந்தையே யூஸ் பண்ணுகிறோம்னு கூட்டணிக்கு வந்துடாங்க. 

கூக்கபுரா பந்து

கூக்கபுரா பேட் கம்பெனி தான , அவங்க பந்துகளையும் தயாரிக்கிறாங்களானு ஒரு கேள்வி எனக்கும் இருந்துச்சு. ஆனா அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க பந்து தயாரிக்கும் கம்பெனி தான்.. சரி விஷயத்துக்கு வருவோம் இந்த கூக்கபுரா பந்துகள் ஆஸ்திரேலியாவுல தயாரிக்கிறாங்க. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அப்புறம் நம்ப பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள்லாம், அவங்க நாட்டுல எந்த அணி வந்து கிரிக்கெட் விளையாடினாலும், இந்த பாருப்பா இங்க கூக்கபுரா பந்தை வச்சு தான் விளையாடனும், இந்த பந்த புடினு கைல குடுத்துடுவாங்க..!

என்னடா இவன் எல்லா நாட்டையும் சொல்லிடான், இதுல இந்தியாவோட பேரையே காணோமேனு தேடுறீங்களா...அடுத்து நாம தான்...

நம்மாளுங்க எப்பையும் எத பண்ணாலும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணி தான் பழக்கம். அப்படி தான் இந்தியா டியூக், கூக்குபுரா என்ற இரண்டு வகை பந்தையும் யூஸ் பண்ணாம, கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு யாருமே யூஸ் பண்ணாத எஸ்ஜி பந்தை தான் யூஸ் பண்ணுறாங்க. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வகை பந்துகள் தான், நம்ம ஊர்ல நடக்கும் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும். 

ஆனா இப்போ சோசியல் மீடியால வைரல்னு பாத்திங்கனா டியூக் vs கூக்கபுரா பந்துல எது பெஸ்ட் எனபது தான்.. எங்கய்யா இந்த லிஸ்டில் எஸ்ஜி-ய காணும்னு தேடும் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு, இது இந்தியால மட்டும் தான் விளையாடுற பந்து..அதுனால இந்த லிஸ்டில் அத சேத்தமுடியாதுனு சொல்லிடாங்க...

சரி நம்ப விஷயத்துகு வருவோம் கூக்கபுரா Vs டியூக்... இரண்டும் பாக்குறதுக்கு ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனா, அதோட பெரிய வித்தியாசம் பந்துல இருக்க தையல் (stitching) தான். எது பந்தை தைக்குறாங்காலனு கேக்காதிங்க... கிரிக்கெட் பந்துல வர ஸ்டிச்சிங் கையாலையும், மொஷின்லையும் தான் தைப்பாங்க. அதுனால தன நம்ம பயலுக அது ஸ்டீச் பால் னு சொல்லுவாங்க.. அதாவது தையல், அவங்க நாட்டு பவுலர்களுக்கு ஏற்றவாறு தயாரிச்சு இருப்பாங்க. அதேமாதிரி, கூக்கபுரா பந்து ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்.

இந்த கூக்கபுரா பந்து, முதல் 20 ஓவர் வரை சும்மா ஸ்விங், சீம், பவுன்சுன்னு ஆகும். அதன்பிறகு, இந்த பந்து ஸ்பின்னர் களுக்கு நல்ல க்ரிப் கொடுக்கும். அதேசமயம், பேட்ஸ்மேனுக்கு பந்த அடிக்கிறதுக்கு கொஞ்சம் ஈஸியா பேட்டிற்கு வரும். டெஸ்ட் மேட்சுல, 80 ஓவர் வரை ஒரு கூக்கபுரா பால் நல்லா தாக்குப்பிடிக்கும்.

ஆனா டியூக் பந்து முழுக்க முழுக்க பாஸ்ட் பவுலர்களுக்கு சப்போர்ட் பண்ணும். ஆனா, 50 ஓவர் வரை தான் தாக்குப்பிடிக்கும். இந்த பந்துல ஸ்பின்னர்களுக்கு க்ரிப் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். இதுதான் இந்த 2 பந்துலையும் இருக்குற வித்தியாசம். 

இப்போ இங்கிலாந்துக்கு டூர் போகும் இந்திய அணியும் டியூக் பந்துல தான் விளையாட போது. இந்திய டீம எடுத்துக்கிட்ட எப்போதும் ஸ்பின்னர் களுக்கு தனி இடம் இருக்கும். ஆனால் டியூக் பந்துல ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கும். அதனால் இந்த தொடரில் இந்திய அணி எப்படி செயல்பட போதுனு பொருத்திருந்து பார்ப்போம். எந்த பந்துல விளையாடினாலும், போடுறவன் கரெட்டா இருந்தா பேட்ஸ்மேன் தடுமாறுவது உறுதி தான்...!

TAGS

Related Cricket News ::

Most Viewed Articles