நியூசிலாந்தின் வேகப்புயலாக உருவெடுத்துள்ள கைல் ஜேமிசன் - சுவாரஸ்ய தகவல்கள்!

Updated: Mon, Jun 21 2021 12:56 IST
Image Source: Google

நியூசிலாந்து அணியில் 26 வயதான இளம் வேகப்புயல் கைல் ஜேமிசன். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான தொடரின் போது இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர். 

தான் அறிமுகமான முதல் தொடரிலேயே இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி, செய்திதாள்களின் தலைப்பு செய்தியாக உருவெடுத்தார்.     

அன்றிலிருந்து இன்று வரை நீயூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஜெமிசன் உருவெடுத்துள்ளார். அதிலும் தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் தனது திறனை நிறுபித்துள்ளார்.

இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜெமிசன், 44 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதும் அடங்கு. 

கைல் ஜேமிசன் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக...!

1) வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் கைல் ஜேமிசன், ஆக்லாந்து கிராமர் ஃபர்ஸ்ட் லெவன் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி வந்தார். அதன்பிம்ன் தனது படிப்பிக்காக கிறிஸ்ட்சர்ச்சில் அணிக்காக விளையாடும் போதுதான் அவர் பந்து வீச்சு பயிற்சிகளை மேற்கொண்டார்.  

2) கைல் ஜேமிசன் வெலிங்டனுக்கு எதிரான தனது முதல் தரப்போட்டியில் 30 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டைக் கூட எடுக்காமல் இருந்தார். மேலும் அப்போட்டியில் ரன் ஏதுமின்றியும் வெளியேறினார்.  

3) கைல் ஜேமிசனின் தனித்துவமான விஷயம் என்றால், அது அவரது உயரம் தான். 6 அடி 8 அங்குல் உயரம் கொண்ட இவர், உலகின் இரண்டாவது உயரமான கிரிக்கெட் வீரர் ஆவர். இப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது இர்ஃபான் முதலிடத்தில் உள்ளார். 

4) இங்கிலாந்து அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற போட்டியில் ஜேமிசன் 110 பந்துகளில் சதமடித்து நியூசிலாந்து தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார். அப்போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

5) தற்போது ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக உள்ள மைன் ஹோசைன், 2019ஆம் ஆண்டு ஜேமிசனின் திறன் குறித்து வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்திருந்தார். இதில் சுவாரஸ்யமாக நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்தின் போது விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஜேமிசனை ஏலத்தில் எடுத்துள்ளது.

6) கைல் ஜேமிசனின் தந்தை மைக்கேல் ஜேமீசன் உள்நாட்டு கிரிக்கெட் வீரராவர். அவர் பாப்பாடோடோ அணியின் முன்னணி வீரராக திகழ்ந்துள்ளார். 

7) கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக கைல் ஜேமிசன் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளையாடினார். 

8) ஜேமிசன் தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் கேரி ஸ்டீட்டின் ஆதவரைக் பெற்று  உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது ஆச்சரிய படும் வகையில் ஸ்டீட் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழான நீயூசிலாந்து அணியில் ஜேமிசன் தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

9) ஜேமிசன் தொடக்கங்களில் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராக விளையாடி வந்தார். அதன்பின் கடந்த ஆம் ஆண்டில், அவர் மெதுவாக பந்து வீச்சாளராக மாற்றப்பட்டார். அப்போது அவரது பந்துவீச்சு பயிற்சியாளராக ரிச்சர்ட் ஹாட்லியின் சகோதரர் டேல் ஹாட்லீ செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

10) டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்களை கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியலில் கைல் ஜேமிசன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். சூப்பர் ஸ்மேஷ் டி20 போட்டியில் 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேமிசன் இச்சாதனையை படைத்துள்ளார். 

TAGS

Related Cricket News ::

Most Viewed Articles