ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!

Updated: Sat, Mar 16 2024 19:24 IST
Image Source: Cricketnmore

17ஆவது சீசன் ஐபிஎல் திருவிழாவானது வரும் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மேலும் இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்துவவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனிலாவாத் கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி ஷிகர் தவான் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞசாப் என அறிப்பட்ட பஞ்சாப் அணியானது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில் அதுவரை 13 சீசன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயருடன் விளையாடி வந்த அந்த அணி ஜார்ஜ் பெய்லி தலைமையில் கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் மற்ற அனைத்து சீசன்களிலும் லீக் சுற்றுடனே வெளியாறிது. இதனால் அணியின் பெயரை மாற்றினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்பது போல் அணியின் பெயரை மாற்றி 2021ஆம் ஆண்டு முதல் விளையாடியது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் என்ற பெயரிலும் விளையாடிய அந்த அணி அதன்பின் விளையாடிய சீசன்களிலும் லீக் சுற்றிலேயே முடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலககின் அதிரடி நட்சத்திர பட்டாளங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் அணிகளில் முக்கியமானது பஞ்சாப் கிங்ஸ் அணிதான். ஏனெனில் அந்த அணியில் யுவராஜ் சிங், குமார் சங்கக்காரா, ஆடம் கில்கிறிஸ், ஷான் மார்ஷ், விரேந்திர சேவாக், கிறிஸ் கெயில், கிளென் மேக்ஸ்வெல்,     கேஎல் ராகுல், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன் என உலகின் பல முன்னணி அதிரடி வீரர்கள் அந்த அணியில் இடம்பிடித்திருந்த போதிலும் அந்த அணி ஒரே ஒருமுறை தான் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த சிசனிலும் கூட அந்த அணி தொடக்கத்தில் அபாரமாக செயல்பட்ட நிலையிலும், இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து லீக் சுற்றுடன் முடித்தது. இதனால் நடப்பு சீசன் பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்கவுள்ளதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளில் ஒன்று என்றால் அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பெயரும் நிச்சயமாக இடம்பெறும். ஆனில் நடப்பு சீசனுக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து பெரும்பாலான வீரர்களை நீக்கமால், வீரர்கள் ஏலத்திலும் சிறப்பாக செயல்பட்டு குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டமைப்பில் உள்ள அதே அணி தான் இந்த சீசனிலும் விளையாடவுள்ளது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நீங்கள் பெரும்பாலான வீரர்களை அணியிலிருந்து நீக்கி, புதிய வீரர்களை தேர்வுசெய்வது என்பது அணிக்குள் இருக்கும் பிணைப்பை பலவீனமாக்கும் என்பதை உணர்ந்து, இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் அணியின் பேட்டிங் வரிசையில் ஜானி பேர்ஸ்டோவ், ரைலீ ரூஸோவ், ஷிகர் தவான், சிக்கந்தர் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தக்கூடிய வீரர்களாக இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் பினீஷிங் ரோலை செய்ய இளம் வீரர் ஜித்தேஷ் சர்மாவுடன் அனுபவ அதிரடி வீரர்லியாம் லிவிங்ஸ்டோன் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியை காகிசோ ரபாடா வழிநடத்த, அவருடன் அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ஹர்ஷல் படேல், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரு இருப்பது எதிரணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்களாக ராகுல் சஹாருடன் லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ரஸா ஆகியோரும் பந்துவீசுவார்கள் என்பது கூடுதல் பலம்.

இதில் ஜானி பேர்ஸ்டோவின் வருகையானது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி சரியான தொடக்கத்தை பெறமுடியாமலேயே ஒருசில போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. அந்த குறையை ஜானி பேர்ஸ்டோவ் தீர்பார் என நம்பப்படுகிறது. மேலும் அணியில் இடம்பெறும் நான்கு வெளிநாட்டு வீரர்களில் ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், காகிசோ ரபாடா மற்றும் சாம் காரண் ஆகியோர் நிச்சயம் இருப்பார். அதேசமயம் சிக்கந்தர் ரஸா மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் வீரர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே வாய்ப்பை பெறுவார்கள் என கணிக்கப்படுகிறது. 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலவீனம்

நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது அந்த அணியின் சுழற்பந்துவீச்சு துறைதான். ஏனெனில் அந்த அணியில் ராகுல் சஹாரைத் தாண்டி சொல்லிக்கொள்ளும் அளவு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. அணியில் லிவிங்ஸ்டோன் மற்றும் சிக்கந்தர் ரஸா ஆகியோர் இருந்தாலும் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியமா என்பதே சந்தேகம் எனும் நிலையில், அவர்களின் பந்துவீச்சும் இந்திய மண்ணில் பெரிதளவில் எடுபடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் இந்த பிரச்சனையை பஞ்சாப் கிங்ஸ் அணி எவ்வாறு சமாளிக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதுதவிர்த்து அந்த அணியின் முக்கியமான பலவீனமாக பார்க்கப்படுவது அதிகபடியான இங்கிலாந்து வீரர்களைத் தான். ஏனெனில் ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் உள்ளிட்ட வீரர்கள் இதற்கு முன்னதாக இந்திய மண்ணில் தடுமாறியுள்ளனர்.இதில் ஜானி பேர்ஸ்டோவ் ஓரளவு ரன்களை சேர்த்திருந்தாலும் மற்ற வீரர்கள் தங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்பது அந்த அணிக்கு மிகப்பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு மாற்றாக சிக்கந்தர் ரஸா மற்றும் ரைலீ ரூஸோவ் ஆகியோர் பார்க்கப்பட்டாலும் அவர்களின் ஃபார்மும் இந்திய மண்ணில் பெரிதாக எடுபடாதது கவணிக்கத்தக்கது. 

இதையத்தொடர்ந்து இந்திய வீரர்களின் செயல்பாடுகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் ஹர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, ஷிகர் தவான், ராகுல் சஹார் ஆகியோர் செயல்பாடுகள் சிறப்பானதாக இருந்தாலும், மற்ற இந்திய வீரர்களின் செயல்பாடுகள் அவ்வளவாக வெளிப்படவில்லை. இதில் பிரப்சிம்ரன் சிங் ஒருசில போட்டிகளில் அதிரடியாக விளையாடினாலும் தொடர்ச்சியாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களுடன் தற்போது ஹர்ஷல் படேல், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ப்ரீத் சிங் ஆகியோரது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறிதான். இதனால் நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஐபிஎல் வரலாறு

  • 2008 - பிளே ஆஃப் சுற்று
  • 2009 - லீக் சுற்று 
  • 2010 - லீக் சுற்று
  • 2011 - லீக் சுற்று
  • 2012 - லீக் சுற்று
  • 2013 - லீக் சுற்று
  • 2014 - இரண்டாம் இடம் (ரன்னர் அப்)
  • 2015 - லீக் சுற்று
  • 2016 - லீக் சுற்று
  • 2017 - லீக் சுற்று
  • 2018 - லீக் சுற்று
  • 2019 - லீக் சுற்று 
  • 2020 - லீக் சுற்று
  • 2021 - லீக் சுற்று
  • 2022 - லீக் சுற்று
  • 2023 - லீக் சுற்று

பஞ்சாப் கிங்ஸ் அணி 

ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, ஹர்ப்ரீத் பாட்டியா, ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, ரிஷி தவான், சாம் கரண், சிக்கந்தர் ரஸா, சிவம் சிங், கிறிஸ் வோக்ஸ், அசுதோஷ் சர்மா, விஸ்வநாத் சிங், தனய் தியாகராஜன், ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், வித்வத் கவேரப்பா, பிரின்ஸ் சவுத்ரி.

பஞ்சாப் கிங்ஸ் போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மார்ச் 23 - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மொஹாலி
  • மார்ச் 25 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூரூ
  • மார்ச் 30 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  vs பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ
  • ஏப்ரம் 05 - குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹ்மதாபாத்
TAGS

Related Cricket News ::

Most Viewed Articles