உலகில் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன்!

Updated: Sun, Jun 20 2021 12:56 IST
Image Source: Google

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைக்கும் பல வீரர்களை ரசிகர்கள் தங்களது உத்வேகமாக நினைத்து வணங்குகின்றன. இதற்கு அவர்கள் விளையாட்டி செய்யும் சாதனைகள் மட்டும் காரணமல்ல, அவர்கள் களத்திற்கு வெளியே நடந்துகொள்ளும் முறையும் ஒரு முக்கிய காரணம். இதனால் தான் என்னவோ கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பிடித்த ஜெண்டில் மேன் கேமாக பார்க்கப்படுகிறது.

அப்படி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு வீரர்கள் ஒரே அணியில் விளையாடினால் எப்படி இருக்கும். இதனைக் கேட்கும் போதே ஒரு சிலருக்கு மகிழ்ச்சியில் புல்லரித்துப்போகும். அதற்கேற்றார் போல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்றிணைந்து உலகின் மிகவும் விரும்பும் கிரிக்கெட் வீரர்களின் பிளேயிங் லெவனை வாக்குகள் அடிப்படையில் அறிவித்துள்ளனர்.

அதனால் இப்பதிவில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பும் வீரர்களின் பிளேயிங் லெவன் குறித்து காண்போம். 

இந்த பிளேயிங் லெவனின் தொடக்க வீரர்களாக இடம்பிடிப்பவர்கள்  இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோர் தான். சர்வதேச கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் பல சாதனைகளைப் படைத்ததுடன், ரசிகர்களின் பெரும் பட்டாளத்தையும் கொண்டுள்ளதால் இவர்களுக்கு தொடக்க ஆட்டக் காரர்களாக அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இந்த பிளேயிங் லெவனின் மூன்றாம் வரிசை வீரராக இடம்பெறுபவர் இந்திய அணியின் தடுப்புசுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட்டிற்கு கிடைத்துள்ளது. மேலும் நான்காம் வரிசை வீரராக இருப்பவர் சற்று ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். அது நியூசிலாந்து அணியின் தற்போதுள்ள கேப்டன் கேன் வில்லியம்சன்னிற்கு நான்காம் இடத்திற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த அணியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தை தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்கள் ஜேக்ஸ் காலிஸ், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. அதிலும் ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல், பிக்பேஷ் என டி20 லீக் தொடர்களிலும் அசத்தி வருவதால் அவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது. 

இந்த அணியின் ஏழாவது இடத்திற்காக மிகக்கடுமையான போட்டி நடந்தது. அப்படி இருப்பினும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஏழாம் இடத்திற்கான வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் எட்டாவது இடத்திற்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஒற்றை சுழற்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மேலும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இலங்கையின் லசீத் மலிங்கா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

உலகின் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களின் பிளேயிங் லெவன்: 

சச்சின் டெண்டுல்கர், ஸ்டீபன் ஃபிளம்மிங், ராகுல் டிராவிட், கேன் வில்லியம்சன், ஜேக்ஸ் காலீஸ், ஏ பி டி வில்லியர்ஸ், மகேந்திர சிங் தோனி, அனில் கும்ப்ளே, டேல் ஸ்டெயின், பிரெட் லீ, லசித் மலிங்கா. 

இந்த அணியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இடம்கிடைக்காமல் இருப்பது ரசிகர்களை சாற்று ஏமாற்றமடைய செய்யலாம். இருப்பினும் மேலே குறிப்பிட்டுள்ள வீரர்களும் இந்த அணியில் இடம்பிடிப்பதற்கு மிகவும் தகுதியுடைவர்களே என்பதுதான் நிதர்சனம். 

TAGS

Related Cricket News ::

Most Viewed Articles