டி20 உலக கோப்பை : இந்திய அணி கடந்து வந்த பாதை!

Updated: Tue, May 25 2021 12:37 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் நாளுக்கு நாளு புது புது மாற்றங்களை செய்து வருகின்றது. முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடங்கி,ஒருநாள், டி20, த ஹண்ட்ரெட், தற்போது டி10 என பல பரிமாணங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதில் என்னவோ டி20 கிரிக்கெட்டில் கிடைத்த வரவேற்பு மற்ற ஃபார்மேட்டுகளுக்கு அவ்வளவாக இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனெனில் அதிரடிக்கு சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. 

இதுவரை நடைபெற்ற 6 டி20 உலகக்கோப்பை களைக் காட்டிலும், இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதில் இந்திய அணி இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கடந்துவந்த பாதை குறித்த சிறு தொகுப்பை காணலாம்...!

2007 டி20 உலகக்கோப்பை - தென் ஆப்பிரிக்கா

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி படு தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் படையை களமிறக்கியது இந்திய அணி. 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதுவரை இந்திய அணி ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தது. சச்சின், கங்குலி, டிராவிட் என யாரும் இல்லாத ஒரு, எங்கு வெற்றிபெற போகிறது என்ற கருத்தெல்லாம் பத்திரிக்கைகளில் தலையங்கமாக வெளிவந்த காலம் அது. 

அப்படி எழுத்தப்பட்ட அனைத்து பத்திரிக்கைகளிலும், தொடர் முடிந்ததும் இந்திய அணியின் வெற்றியை செய்திகள் முதல் பக்கத்தை அழங்கரித்தன. ஆம், டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் பதிப்பின் சாம்பியன் வெத்துவேட்டு அணி என்ற விமர்சிக்கப்பட்ட இந்திய அணி தான். 

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதோடு, இந்திய அணிக்கு புதிய கேப்டனையும் அறிமுகப்படுத்தியது. 

2009 டி20 உலகக்கோப்பை - இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடைபெற்ற 2009ஆம் ஆண்டு டி20 போட்டி இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் படு தோல்வியைத் தழுவியது. அதில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் அயர்லாந்து அணியுடன் கிடைத்த வெற்றி மட்டும் தான். 

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இந்த முறை, முந்தைய சீசனில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. 

2010 டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸ்

டி20 உலகக்கோப்பை யின் மூன்றாவது சீசன் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் வெற்றி பெற்று சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தது. 

ஆனால் அதன்பிறகு ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் ஏற்பட்ட தோல்வியினால் தொடரிலிருந்து வெளியேறியது. அத்தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

2012 டி20 உலகக்கோப்பை - இலங்கை

நான்காவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரானது இலங்கையில் நடத்தப்பட்டது. இதன் லீக் ஆட்டங்களில் இந்திய அணி சில வெற்றிகளை பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்தது. 

இத்தொடரில் டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று அசத்தியது. 

2014 டி20 உலகக்கோப்பை - வங்கதேசம்

இம்முறை இந்திய அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்கிய தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை ஈட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஆனால் இறுதி போட்டியில் இலங்கை அணி, இந்தியாவை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. இதில் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம் என்றால் அது, விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது மட்டும் தான். 

2016 டி20 உலக கோப்பை - இந்தியா

இந்தியாவில் நடத்தப்பட்ட தொடரில் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. 

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி, கோப்பை வெல்லும் கனவை இழந்தது. மேலும் அத்தொடரோடு ஆறு சீசன்களாக உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்திய இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அது கடைசி டி20 உலகக்கோப்பை சீசனாகவும் அமைந்தது ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அதிர்ச்சி.

TAGS

Related Cricket News ::

Most Viewed Articles