Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு

Advertisement
Indian Cricket Team Journey To World Test Championship Final
Indian Cricket Team Journey To World Test Championship Final (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 07, 2021 • 02:32 PM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை நடத்தி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 07, 2021 • 02:32 PM

இத்தொடரின் இறுதி போட்டிக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளன. 

Trending

இரு அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற விளையாட்டு மைதானமான லர்ட்ஸில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில் இத்தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்து சில தகவல்களை காண்போம்..!

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -2019

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அஜிங்கியா ரஹானே தலைமையிலான இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

தென் ஆப்பிரிக்க vs இந்தியா - 2019

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இத்தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது. மேலும் இத்தொடரில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 529 ரன்களை குவித்ததோடு தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா vs வங்கதேசம் -2019

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியையும் விளையாடியது. 

இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷான் சர்மா பகலிரவு டெஸ்ட் போட்டியிக் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்தினார். 

நியூசிலாந்து vs இந்தியா - 2020

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஆனால் இத்தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியுடன் படு தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்தது. 

ஆஸ்திரேலியா vs இந்தியா -2020/21

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் படு தோல்வியைச் சந்திருந்த இந்திய அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை பெற்று அசத்தியது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.

இந்தியா vs இங்கிலாந்து -2021

இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவிற்கு வந்தது. இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. 

இதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

Advertisement

Advertisement