Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் ஓர் பார்வை!

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement
IPL 2021: A look at the Chennai Super Kings!
IPL 2021: A look at the Chennai Super Kings! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 11, 2021 • 01:36 PM

ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழ்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 11, 2021 • 01:36 PM

இதையடுத்து ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக 19ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

Trending

இதனால் இப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், நிச்சயம் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதன்படி இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 5 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

மேலும் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளெசிஸ், மொயீன் அலி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.

மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோரும் ஃபினிஷர் ரோலில் மகேந்திர சிங் தோனி, பிராவோ, சாம் கரன் ஆகியோரும் அணிக்கு பக்கபலமாக உள்ளனர். பந்துவீச்சாளர்களில் தீபக் சஹார், லுங்கி இங்கிடி, ஜோஷ் ஹசில்வுட், ஷர்துல் தாக்கூர், பெஹண்ட்ராஃப், இம்ரான் தாஹீர் ஆகியோருக்கு அணிக்கு உறுதுணையாக உள்ளனர். 

மேலும் நடப்பு சீசனில் அனைத்து சிஎஸ்கே வீரர்களும் பங்கேற்பார்கள் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே பலத்துடன் இரண்டாம் பகுதியை எதிர்கொள்ளவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டவணை:

  • சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் - மாலை 7:30, செப்டம்பர் 19, துபாய் சர்வதேச மைதானம்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, செப்டம்பர் 24, ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மாலை 3:30, செப்டம்பர் 26, ஷேக் சயீத் மைதானம்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, செப்டம்பர் 30, ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, அக்டோபர் 2, ஷேக் சயீத் மைதானம்
  • டெல்லி கேபிடல் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, அக்டோபர் 4, துபாய் சர்வதேச மைதானம்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் - மாலை 3:30, அக்டோபர் 7, துபாய் சர்வதேச மைதானம்

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டூ பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஜெகதீசன், எம்எஸ் தோனி (கே),புஜாரா, ஹரி நிஷாந்த், டுவைன் பிராவோ, பகத் வர்மா, கிருஷ்ணப்பா கவுதம், மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், ஹரிசங்கர் ரெட்டி, இம்ரான் தாஹிர், கரன் சர்மா, கே.எம்.ஆசிப், லுங்கி இங்கிடி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஷர்துல் தாக்கூர், ஜேசன் பெஹண்ட்ரஃப்.

Advertisement

Advertisement