Maharashtra vs uttar pradesh
விஜய் ஹசாரே கோப்பை: ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த கெய்க்வாட்!
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றில் அசத்திய தமிழ்நாடு உள்ளிட்ட 8 அணிகள் மோதிய காலிறுதி சுற்று நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற உத்திரபிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 330/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இரட்டை சதமடித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் குவித்தார்.
அதை தொடர்ந்து 331 ரன்களை துரத்திய உத்தர பிரதேச அணிக்கு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் அதிரடியாக விளையாடி 18 பவுண்டரி 3 சிக்ஸருடன் அதிகபட்சமாக 159 ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 47.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ரன்களுக்கு அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய மகாராஷ்டிரா சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மகராஷ்டிரா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
Related Cricket News on Maharashtra vs uttar pradesh
-
விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் கெய்க்வாட், ஹங்கரேக்கர் சிறப்பு; அரையிறுதியில் மகாராஷ்டிரா!
உத்திரபிரதேச அணிக்கெதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஒரே ஓவரில் 7 சிக்சர்கள்; ருத்ர தாண்டவமாடிய கெய்க்வாட்!
விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்றில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Dec 2024 02:20
-
- 20 Nov 2024 09:20
-
- 05 Oct 2024 01:56
-
- 02 Oct 2024 09:13
-
- 13 Sep 2024 12:23
-
- 10 Sep 2024 12:01